ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டரின் இன்றைய மதிப்பு ஒன்னேகால் கோடி

உலகில் முதன் முறையாக டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டபோது, அவை கைகளால் வடிவமைப்பதுதான் வழக்கம். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர்களை உருவாக்கினார். 1976ம் ஆண்டு இந்த வகை கம்ப்யூட்டர்கள் மொத்தம் 200 மட்டுமே உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக அவை இப்போது அரிய வகை பொருட்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

கலிபோர்னியாவில் பெண் ஒருவர் இறந்துபோன தனது கணவரின் அறையில் இருந்த பல மின்னணு பொருட்களை, பழைய மின்னணு பொருட்களை வாங்கும் கடையில் கொடுத்துச் சென்றார். அவர், தனது விவரங்களை அளிக்கவில்லை. அப்பெண் கொடுத்த பொருட்களில் ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர் ஒன்று இருந்தது. மிகவும் அரிய பொருளான அதன் விலை இப்போது ரூ.1 கோடியே 26 லட்சமாகும். அமெரிக்க சட்டப்படி பழைய பொருட்கள் கடையில் தொன்மை வாய்ந்த பொருட்கள் தவறுதலாக கிடைத்தால், அதன் உரிமையாளருக்கு பாதி தொகையை வழங்க வேண்டும். எனவே இப்போது அந்த பழைய மின்னணு பொருள் கடையின் உரிமையாளர், ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டரை அளித்த பெண்ணை தீவிரமாக தேடி வருகிறார்.


Post a Comment

Previous Post Next Post